மாலிக் காஃபூர் படையெடுப்பை
பற்றியும் அதன் மூலம் நமது கோயில்கள் எவ்வாறு அழிக்கப்பட்டன் என்பதை
பற்றியும் பலர் அறிந்திருப்பீர்கள். தங்களது மதக் கடமையாக ஜிஹாத் என்ற
பெயரில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் அந்த பேரழிவுகளையும், கொடுமைகளையும்
அரங்கேற்றினார்கள் என்பது வரலாற்றில் பதிவாகியுள்ளது.
ஆனால் நமது கலாசாரத்தையும், சமயத்தையும் பாதுகாக்கும் பணிக்காகவே
உருவாக்கப் பட்ட அரசுத் துறைகளே கோயில் பாரம்பரியத்தை திட்டமிட்டு
சிதைக்கும் கொடுமை இப்போது பல இடங்களில் நடந்து கொண்டிருக்கிறது.
காந்தியின் பெயரை வைத்து கொண்டு காந்தியத்தை அழிக்கும் நேருவின் வம்சத்தை
போல், அறத்தை காக்க நமது மன்னர்களாலும் சான்றோர்களாலும் உருவாக்கப்பட்ட
கோயில்களை, அதே அறத்தின் பெயரால் கிறித்துவ பாதிரியார் பெற்றெடுத்த திராவிட
இனவாத அரசியல் வியாதிகள் நமது கோயில்களை திட்டமிட்டு அழித்து கொண்டு
இருக்கிறது. அந்த கொடியவர்களின் கொடுங்கோல் நிர்வாகவத்தில் நடந்த
அநியாயங்கள் ஏராளம்.
ஐம்பொன் சிலைகளை வெளி நாட்டுக்கு கடத்தினார்கள். கோயில் நகைகளை வெளி
நாட்டுக்கு கடத்தினார்கள். கற்சிலைகளை வெளி நாட்டுக்கு கடத்தினார்கள்.
தற்பொழுது கோயிலையே பெயர்த்தெடுத்து கடத்த ஆரம்பித்துவிட்டார்கள் இந்த
திராவைகள்.
கொங்கு மண்டலம் என்று அழைக்கப்படும் ஈரோடு மாவட்டம் நசியனூரில் தான் இந்த அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் நடந்து உள்ளது. நசியனூர்
என்ற இந்த பழம் பெருமை வாய்ந்த தலம் ஈரோட்டில் இருந்து சுமார் பத்து கிலோ
மீட்டர் தொலைவில் கோவை – சேலம் நெடுஞ்சாலையில் அமைந்து இருக்கிறது இந்த
நசியனூர். திருதலத்தில் ஸ்ரீ முத்துமரகதவல்லி சமேத மூவேந்திர ஈஸ்வரர்
அருள்பாலிக்கிறார். ஈஸ்வரன் கோயிலின் இடதுபுறம் கிழக்கு நோக்கி ஸ்ரீ பூதேவி
நீதேவி சமேத ஆதிநாராயண பெருமாள் அருள்பாலிக்கிறார். இந்த பல ஆயிரம் வருட
பழமையான கோயில் ஹிந்து சமய அறநிலை துறையின் கட்டுபாட்டில் உள்ளது.
மூவேந்தர்களால் கட்டப்பட்ட இந்த சிறப்பு மிக்க புண்ணிய தலம் அற(மற்ற)
நிலையத் துறையின் அகோர பசிக்கு இரையாக்கி கொண்டு இருக்கிறது.
பல கோடி மதிப்புள்ள புராதான பெருமை மிக்க கோயில் மண்டபம் (திருடுவதற்கு முன்பு):
எத்தனையோ சிற்பிகள் கடும் உழைப்பில் உருவான விலை மதிப்பற்ற நமது பாரம்பரிய சொத்து இன்று களவாடப்பட்ட நிலையில்….
இத்தோடு விட்டார்களா இந்த படுவாவிகள்? இல்லை. பல நூற்றாண்டுகள்
கம்பீரமாக நின்ற எனது இறைவன் முருக பெருமானுக்கு கட்டப்பட்ட கோயிலையே
மொத்தமாக கொள்ளை அடித்து உள்ளனர். தற்பொழுது அரை நூற்றாண்டுக்கு கூட
தாங்காத வகையில் சிமெண்ட் கற்களை வைத்து ஒரு போலி மண்டபத்தை கட்டி கொண்டு இருக்கிறார்கள் –
இந்த மண்டபங்கள் ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்ட லாரிகளில் அழகாக
வெட்டி எடுக்கப்பட்டு பார்சல் செய்யப்பட்டு அனுப்பப்பட்டதாக சொல்கிறார்கள்.
வடிவேல் ஒரு படத்தில் “ என்னோட கிணற காணோங்க” என்று சொல்வார். ஆனால் இங்கு
உண்மையாகவே ஒரு பெரிய மண்டபம் பகலில் ஊர் மக்களை ஏமாற்றி சுட சுட வெட்டி
பார்சல் செய்து உள்ளனர். ஆனால் இது எல்லாம் எதுவுமே தெரியாதது போல் இந்த
இந்து சமய அறநிலை துறையின் நிர்வாக அதிகாரி கண்ணை மூடி கொண்டு
இருந்துள்ளார். எத்தனையோ ஏழைகள் கொண்டு வந்து போடும் ஊண்டியல் பணத்தில்
வயிறு வளர்க்கும் இந்த அதிகாரிகள் கொஞ்சம் கூட விசுவாசம் இல்லாமல் உண்ட
வீட்டிற்கே துரோகம் செய்து உள்ளனர்.
இதற்கு பிறகும் இவர்களின் அரக்க தனம் குறையவில்லை. கோயில் தூண்களை
சுத்தப்படுத்துகிறேன் என்ற பெயரில் ’SAND BLASTING’ (மணலை சிலைகள் மீது
தண்ணீர் போல் பீச்சி அடித்தல்) என்ற தடை செய்யப்பட்ட தொழில் நுட்ப முறையில்
எத்தனை கோடி கொடுத்தாலும் செய்ய முடியாத கலை நயம் மிக்க சிலைகள் மட்டும்
கோயில் மதிர் சுவர்கள் மற்றும் பழங்காலத்து தரவுகளை மழுங்கடித்து உள்ளனர்.
இதை பற்றிய ஆதார படங்கள் கீழே உள்ளன.
SAND BLASTING செய்வதற்கு முன்பு இருந்த கோயில் சுவர்கள் (கல்வெட்டுகள் இரண்டாம் அடுக்கில் உள்ளது) –
SAND BLASTING செய்த பின்பு பொலிவு இழந்த நிலையில் ஓட்டை ஒடிசல்களுடன் கோயில் சுவர்கள் –
சீரழிக்கப்பட்ட கோயில் சுவர்கள், SANG BLASTING தாக்குதல் தாங்க முடியாமல் உடைந்து விழும் கோயில் சுவர்கள் –
வரம் கொடுத்தவன் தலையில் கையை வைத்த பஸ்மாசுரனை போல கோயில் கருவரையிலேயே
இவர்கள் தங்கள் ஊழலை கொண்டு சென்று உள்ளனர். கோயிலின் ஆகம தர்மம் மற்றும்
அதன் புணிதம் கெடுக்கும் வகையில் கோயில் கருவறைக்குள் தர்மத்தை மீறி
இவர்கள் கல்லா கட்டுவதற்காக டைல்ஸ் ஒட்ட போகிறார்கள். இதற்கான ஆதார படங்கள்
கீழே….
கோயில் கருவரை மண்டபம் மற்றும் அதில் போடப் போவதாக சொல்லப்படும் டைல்ஸ் –
இத்தனை அநியாயங்களும் இந்து சமய அறநிலை துறையால் நியமிக்கப்பட்ட பல
ஆயிரம் சம்பளம் பெறும் கோயில் நிர்வாக அதிகாரியின் முன்னிலையிலேயே
நடைபெற்று உள்ளது. இந்த கிராம மக்கள் அப்பாவிகள் இது குறித்து எந்த தகவலும்
அறியாமல் அறநிலை துறை எதோ அவன் காசு போட்டு நல்லது செய்கிறான் என்ற
நினைப்பில் இருந்து விட்டுள்ளனர்.
திருக்கோயில்களின் வருமானத்தை ஏற்கனவே இந்த அறநிலையத் துறை கூட்டம்
தின்று வயிறு வளர்த்து கொண்டு இருக்க தற்பொழுது அது போதாது என்று சில
திருடர்களுடன் சேர்ந்து கோயில்களையே புனர் அமைக்கிறேன் என்ற பெயரில் திருடி
கொண்டு இருக்கிறது. இவர்கள் வழி தனி வழி. அதாவது கொள்ளையர்களிடம் கோயில்
பொறுப்பை ஒப்படைத்து விட்டு பிறகு அவர்களை கொள்ளை அடிக்க வைத்து அதில்
பங்கு வாங்கி கொள்வார்கள். நாளை ஏதாவது பிரச்சனை என்றாலும் கூட அந்த கொள்ளை
அடித்தவனை கை காட்டி விட்டு இவர்கள் எஸ்கேப் ஆகி விடுவார்கள்.
படித்தவர்கள் அல்லவா? அவ்வாறு தான் இருப்பார்கள். இவர்களின் இந்த கபட
நாடகத்தை அறியாமல் பல அப்பாவி பொதுமக்கள் இவர்களிடம் ஏமாந்து
விடுகிறார்கள். பொது மக்கள் பார்வையில் கோயில் புணர் நிர்மானம்
செய்யபடுகிறது என்பது போல தான் தெரியும். உள்ளே சென்று பார்த்தால் தான்
தெரியும் இவர்கள் திருட்டுதனம் என்னவென்று…
அதாவது பெரிய கோயில்களில் வரும் பல கோடி வருமானத்தை ஏழை
ஹிந்துகளுக்கும் அழியும் நிலையில் இருக்கும் நமது பாரம்பரிய விவசாயம்,
கலைகள், தொழில் நுட்பங்கள், வனவாசிகள் போன்ற மக்களுக்கு கொடுக்காமல்
கோயில்களை நிர்மானம் செய்தேன் என்ற பெயரில் பல கோடிகளை ஒதுக்குகிறார்கள்.
இதில் அவர்களுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
புணர் நிர்மானம் செய்கிறேன் என்று வசூல் வேட்டை நடத்தி அதில் கொஞ்சம்
விழுங்கி மீதியை காண்ட்ராக்ட் விட்டு விழுங்கி விடுகிறார்கள். அது மட்டும்
இன்றி பல கோடி மதிப்புள்ள புராதாணம் மிக்க சிலைகளை மற்றும் தூண்களை
சேதப்படுத்தப்பட்டுவிட்டது என்று கூறி அதை கோயில்களில் இருந்து நீக்கி
விடுகிறார்கள். இவ்வாறு நீக்கப்பட்ட சிலைகள் எங்கு போகும் என்று நான் சொல்ல
தேவையில்லை.
அது மட்டுமா? மார்பல் போடுகிறேன் டயல்ஸ் போடுகிறேன் என்ற பெயரில்
திருகோயிலின் ஆகமத்தை கெடுத்து தெய்வ சக்திக்கு குந்தகம் ஏற்படுத்தி
கோயிலின் புணிதத்தை போக்கி விடுகிறார்கள். பாரமரிக்கப்படாத பூமியில் கருவேல
மரங்கள் முழைப்பது போல், தெய்வ சக்தி இல்லாத மனதில் ஆப்பிரகாமிய மதமாற்றம்
என்ற தீய சக்தி உள்ளே நுழைந்து விடுகிறது. கோயிலுக்கு வருமானம் வந்தால்
அதை ஆக்கிரமிக்க ஓடி வரும் தண்டல்காரர்கள் பல ஆயிரம் வருட பழமையான
கோயில்களை மருந்துக்கு கூட கண்டு கொள்வது இல்லை.
இது குறித்து எத்தனையோ கடிதங்கள், முறையீடுகள், காவல் துறை
விண்ணப்பங்கள் செய்தாயிற்று. ஆனால் இந்த கொள்ளை கூட்டத்திம் மீது யாரும்
நடவடிக்கை எடுக்க வில்லை. இந்து சமய அறநிலை துறை இணை ஆணையர் மற்றும்
ஆணையர்க்கு மனுக்களும் வழங்கப்பட்டுவிட்டது. இந்த அதிகார மற்றும் நிழல் உலக
சக்திமிக்க கூட்டத்தை எதிர்த்து காவல் துறையில் யாரும் புகார் கொடுக்கவும்
முன்வரவில்லை. அதன் பிறகு பல கட்ட போராட்டத்திற்கு பின்பு நல் உள்ளம்
கொண்ட ஒரு சிலரது முயற்சியால் லஷ்மி நாராயணன் என்ற வக்கீல் மூலம் காவல்
துறையில் புகார் மனு கொடுக்கப்பட்டது. இவ்வளவு நடந்தும் கோயில் பணத்தில்
தனது வயிற்றை நிரப்பி கொள்ளும் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் ஒரு
நடவடிக்கையும் எடுக்கவில்லை.
2 இலட்சம் கோடி கொள்ளை போனதற்கே ஒரு ரியேக்ஷனும் காட்டாத அதிகாரிகள்
உள்ள நாட்டில் இந்த இரண்டு கோடி மதிப்புள்ள மண்டபங்களுக்கா விசாரணை செய்ய
போகிறார்கள்!!!! ஆனாலும் எனக்கு ஒரு கேள்வி இதே போன்ற ஒரு நிலை கிறித்துவ
மடாலயங்களுக்கோ அல்லது இஸ்லாமி மசூதிகளுக்கோ ஏற்பட்டு இருந்தால் இந்த அரசு
இதே நிலையை எடுக்குமா?
நம்மால் முடிந்த வரை இதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் இந்த
கட்டுரையை எழுதியுள்ளேன். இந்த கட்டுரையை தயவு செய்து உங்கள்
நண்பர்களுக்கு அனுப்புங்கள். இதை download செய்து உங்கள் அலுவலக மக்களுக்கு
அனுப்புங்கள். இதை அடிப்படையாக வைத்து நீங்கள் நேரடியாக தமிழக அரசிற்கு
மின்னஞ்சல் அனுப்பலாம். சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளலாம். வெளிநாட்டு
வாழ் தமிழர்கள் அறநிலை துறைக்கு ஆணையருக்கு, ஈரோடு மாவட்ட கலெக்டர்
மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கும் தொலை பேசி மூலமாகவோ, FAX மூலமாகவோ,
மின்னஞ்சல் மூலமாகவோ இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு விண்ணப்பம்
செய்யலாம். ஆந்திராவை சேர்ந்த அமெரிக்கா வாழ் மக்கள் இது போன்ற முறையில் பல
கோயில்களை காப்பாற்றியுள்ளனர். ஆதலாம் நாமும் இந்த முறை கடைபிடித்து நமது
பாரம்பரிய அடையாளத்தை காப்போம்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் மின்னஞ்சல்:
Shri Dr. V K Shanmugam, I.A.S. Email ID: collrerd@nic.in & Ph no: +91 424 2266700
காவல் துறை உதவி ஆணையாளர்:
Thiru.S.Panneerselvam,I.P.S Erode SP, E mail ID: sperode@gmail.com, Ph no: 04242261100
இந்து சமய அறநிலை ஆணையர், சென்னை:
E mail ID: tn.endowments@gmail.com, Ph No: 044-28334817
(பின் குறிப்பு: உலகில் எந்த தொலை பேசி எண்ணை தேடினாலும் வலைதளத்தில்
கிடைக்கும். ஆனால் இந்து சமய அறநிலை துறையின் எந்த ஒரு உயர் அதிகாரியின்
பெயரோ, அலுவலக முகவரியோ அல்லது தொலைப்பேசி எண்ணோ உங்களுக்கு கிடைக்கவே
கிடைக்காது)