கலசங்களை அபிஷேகம் செய்யும் நீரை பக்தர்கள் மீது தெளித்துவிட்டு, கணக்குவழக்குகளில் கண்கட்டு வித்தை காட்டுகிறது அறநிலையத்துறை.
சென்னை உயர்நீதிமன்ற ஆணையை ஏற்று, அய்.நா. வின் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோவின் நிபுணர் குழு, தமிழகம் வந்தது.
மதுரை மீனாட்சியம்மன், திருநெல்வேலி நெல்லையப் பர், நாங்குனேரி வானமாமலை, நாமக்கல் மருதகாளியம்மன், கும்பகோணம் நாகேஸ்வரர், திருவண்ணாமலை அண்ணா மலையார், திருவரங்கம் அரங்கநாதர், காஞ்சிபுரம் காமாட் சியம்மன், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், பழவேற்காடு ஆதிநாராயணர் ஆகிய கோயில்களுக்குச் சென்று ஆய்வு செய்தது.
இந்தக் குழுவில் யுனெஸ்கோ இந்தியப்
பிரிவின் அதிகாரிகளான ஷிகா ஜெயின், தெபாசிஷ்நாயக், அபூர்வா சின்கா, மத்திய
தொல்லி யல் துறை அதிகாரி பகவான் சரத் இவர்களோடு திருவரங்கம் ரங்கராஜன்
நரசிம்மனும் இருந்தார். இந்த ரங்கராஜன் நரசிம்மன் 2015 மார்ச்சில் சென்னை
உயர்நீதிமன்றத்தில், ‘இந்து சமய அறநிலையத் துறையினர் தங்கள்
கட்டுப்பாட்டில் உள்ள தொன்மையான கோயில்களில் கோயில் ஆகமங் களையோ, மரபு
களையோ, தங்கள் சட்ட விதிகளையோ பின்பற்றுவ தில்லை.
புனரமைப்பு, குடமுழுக்கு என்ற பெயரில் கோயில்களைத் தோண்டுகிறார்கள். சுவர்களை உடைக் கிறார்கள். கல்வெட்டுகளை பாழ்படுத்துகிறார்கள்’ என்று மனு தாக்கல் செய்தார்.
ஏற்கெனவே இதுபோன்ற ஒரு வழக்கு, பொதுநல வழக்காக இருந்ததால் அதோடு திருவரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மனுவையும் இணைத்துக்கொண்டது உயர்நீதி மன்றம்.
இதையடுத்து "தொன்மையான கோயில்களை அதன் பாரம்பரியத்தோடு பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. ஆகவே, தமிழக கோயில்களில் திருப்பணிகளோ, குட முழுக்கோ செய்யக்கூடாது" என இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்றம்.
உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையை மீறி தனது கட்டுப்பாட்டிலுள்ள பல கோயில் களில் குடமுழுக்கு களையும் திருப்பணிகள் என்ற பெயரில் மராமத்து வேலை களையும் செய்தது அறநிலையத்துறை.
இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார் ரங்கராஜன் நரசிம்மன்.
இதனை விசாரித்த நீதிபதிகள், ஐ.நா.வின் யுனெஸ்கோ இந்தியப் பிரிவிடம் "கோயில் பராமரிப்பு என்ற பெயரில் அற நிலையத்துறை தவறுகளைச் செய்திருக்கிறது? அவற்றை எப்படிச் சரிசெய்வது? தொன்மையான என் னென்ன கோயில்களை எப்படிப் பராமரிக்கவேண்டும் என்று யோசனை கேட்டார்கள். -
"ஆய்வு செய்தபிறகுதான் தெரிவிக்க இயலும் என்றது யுனெஸ்கோ இந்தியப் பிரிவு.
இதைக்கண்டு அஞ்சிய அறநிலையத் துறை "நீங்கள் ஆய்வுக்கு வரக்கூடாது. வந்தால் மத மோதல்கள் உண்டா கும். ஆகவே நாங்கள் ஆய்வுக்கு வர மாட்டோம்' என்று உயர் நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதுங்கள்" என்று யுனெஸ்கோ இந்தியப் பிரிவுக்கு மிரட்டல் கடிதம் எழுதி யது.
அறநிலையத்துறையின் இந்தக் கடிதம், உயர்நீதிமன்றத்தின் கவனத்துக்குச் சென்றது. கோபமான நீதிபதிகள், இக்கடிதம் பற்றி அறநிலையத்துறையிடம் விளக்கம் கேட்டார்கள். நீதிமன்றத்திற்கு வந்த அறநிலையத்துறை ஆணையர், அப்படியொரு கடிதம் எழுதியதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
இதன்பிறகே, இந்திய தொல்லியல்துறை உதவியுடன் நாம் மேலே குறிப்பிட்ட பத்து கோயில் ஆய்வுகளை மேற் கொண்டிருக்கிறார்கள் யுனெஸ்கோ வல்லுநர்கள். இந்தக் குழுவோடு அத்தனை கோயில்களுக்கும் சென்ற திருவரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை சந்தித்தோம்.
‘ஆய்வுக் குழுவில் நானும் இருந்தேன். சென்றேன். எனக்குத் தெரிந்த வரையில் எந்தக் கோயிலிலும் இந்து சமய அறநிலைய சட்ட விதிகளையோ, அந்தந்த கோயில் களின் ஆகம விதிகளையோ பின்பற்றவே இல்லை.

தமிழக ஆட்சியில் இருந்தவர்கள் கடந்த 4
ஆண்டுகளில் எட்டா யிரம் கோயில்களில் குடமுழுக்குச் செய்திருக்கிறார்கள்.
பொதுமக்கள் நன்கொடையில் அல்லது அந்தந்தக் கோயில் நிதியில் இருந்தே
குடமுழுக்குகள் செய்யப்பட்டிருக்கின் றன. அந்த எட்டாயிரம் கோயில்களில்
குடமுழுக்குக்கான எந்தவித தணிக்கையும் இல்லை. கணக்கும் இல்லை,
நெல்லையப்பர் கோயில், கோயில், கோயில், ரங்கநாதர் கோயில்களில் அவரவர் நோக்கத்திற்கு இடித்திருக் கிறார்கள். தோண்டியிருக்கிறார்கள், மீனாட்சியம்மன் அண்ணாமலையார் மீனாட்சியம்மன் கோயில் பொற் றாமரைக் குளத்தருகே இருந்த மண்டபத்தைக் காண வில்லை. 1500 ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் கட்டிய குடந்தை வானம்பாடி நாகநாதன் கோயிலையே இடித்து விட்டுக் கட்டியிருக்கிறார்கள். ‘ஏன் இடித்தீர்கள்?’ என்று கேட்ட யுனெஸ்கோ குழுவிடம், ‘பழைமை மாறாமல் திரும்பக் கட்டுறதுக்காக இடித்தோம்’ என்றார்கள்.
அண்ணாமலையார் கோயிலுக்குள், நான்காவது பிரகாரத்தில் அதிகாரிகள் ரெஸ்ட் எடுப்பதற்காகவே புதிதாக காட்டேஜ் கட்டியிருக்கிறார்கள். ரங்கநாதர் கோயிலில் ஆயிரம்கால் மண்டபம் அருகே புதையல் எடுப்பதற்காக தோண்டி, ஐம்பொன்னால் ஆன, பழமையான நடராஜர் சிலையையும் பெருமாள் சிலையையும் எடுத்திருக்கிறார்கள்.
இந்த சிலைகள் பற்றி தொல்லியல் துறைக்குத் தெரிவிக் கவில்லை. இப்படிக் கணக்கற்ற விஷயங்கள் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டன யுனெஸ்கோ வல்லுநர்களின் ஆய்வறிக்கை, நிச்சயமாக இந்து சமய அறநிலையத் துறைக்கு பெரும் அதிர்ச்சியைத் தரும் என்பது மட்டும் நூறு மடங்கு உண்மை' என்றார் ரங்கராஜன் நரசிம்மன்.
"பழிவாங்கும் எண்ணமும் சர்வாதிகாரப் போக்கும் கொண்ட வீரசண்முகமணி போன்றவர்களை இந்து சமய அறநிலையத்துறைக்கு ஆணையராக நியமிப்பதால்தான் இத்தனை முறைகேடுகளும் விதிமீறல்களும் நடக்கின்றன என்கிறார்கள் அதே துறையில் பணியாற்றும் ஊழியர்கள். முறைகேடுகள் மட்டுமின்றி, அதிகாரிகளும் அமைச்சர் களும் தக்கார்களும் அடித்திருக்கும் ஊழல் கொள்ளையும் அந்த ஆய்வறிக்கையில் நிச்சயம் இருக்கும் என்று நம்புவோம்.
- து.ராஜா
நன்றி: நக்கீரன் ஜூன் 13-15